சன் தொலைக்காட்சியில் வள்ளி சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்துவைக்கிறார் நடிகை உமா.
முன்னாள் கதாநாயகி சுமித்ராவின் மூத்த மகள் உமா சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். பெரிய அளவில் பிரபலமாகாவிட்டாலும் நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர். சொக்கத்தங்கம், தென்றல், கடல்பூக்கள், செல்வம் உள்ளிட்ட பல படங்களில் திறமையாக நடித்துள்ளார் உமா.
குடும்பப்பாங்கான தோற்றம் கொண்ட உமா ஒரு படத்தில் கூட கவர்ச்சியாக நடித்ததில்லை. இதனால்தான் விரைவில் திருமணமாகி பெங்களூர் பக்கம் செட்டிலாகிவிட்டார். அங்கே போய் சும்மா இல்லை. கன்னட சீரியல்களில் நடித்து வருகிறார்.
அந்த அனுபவம்தான் தமிழ் சீரியல்களில் நடிக்க அவரை தூண்டியிருக்கிறது. விடுவார்களா நம் ஊர் சீரியல் தயாரிப்பாளர்கள். பெங்களூருக்கு டிக்கெட் போட்டுப்போய் புக் செய்துவிட்டார்கள்.
வள்ளி என்ற சீரியலில் இப்போது நடித்து வருகிறார். விரைவில் இது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. சினிமாவில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த உமா டிவியில் இல்லத்தரசிகளிடம் பெயரெடுப்பாரா, அல்லது இவரும் அழ வைப்பாரா என்று சீரியல் ஒளிபரப்பாகும் போது தெரியும்.
Post a Comment