பவர் ஸ்டாருக்கு வாய்ப்பூட்டு போட்ட ஷங்கர்

|

Shankar Seals Power Star Lips

சென்னை: பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஒரு ஓட்ட வாய் என்பதால் தனது ஐ படத்தின் கதையை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று இயக்குனர் ஷங்கர் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.

இயக்குனர் ஷங்கர் விக்ரமை வைத்து எடுக்கும் படம் ஐ. இதில் ஏமி ஜாக்சன் தான் நாயகி. காமெடிக்கு சந்தானம், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உள்ளனர். படத்தில் பவர் ஸ்டாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பவர் ஸ்டாருக்கு தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுவதில் அதிகப் பிரியம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இது குறித்து ஷங்கருக்கு தெரியாதா என்ன. இவரை விட்டால் நாம் படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு கதையை ஊருக்கெ சொல்லிவிடுவார் என்று அஞ்சினார் ஷங்கர். இதையடுத்து அவர் பவர் ஸ்டாரை அழைத்து யாராவது ஐ படத்தின் கதை குறித்து கேட்டால் மூச்சு விடக்கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.

ஷங்கர் போட்ட வாய்ப்பூட்டையும் மீறி பவர் ஸ்டார் ஏதாவது உளறுவாரா?

 

Post a Comment