சென்னை: இளைய தளபதி விஜய்க்கும், பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது.
விஜய் நடிக்க வந்தபோது அவரது புகைப்படத்தை வெளியிட ஒரு நாளிதழ் மறுத்ததாம். இந்த ஆளெல்லாம் நடிக்க வந்துட்டார் என்று பலர் கிண்டல் செய்துள்ளனர். தன்னை இகழ்ந்தவர்கள் முன்பு சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு விஜய் நடித்தார். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் இளைய தளபதியாக அமர்ந்தார்.
விஜய் எல்லாம் பெரிய ஹீரோவாக முடியாது என்று கூறியவர்கள் கண் முன்னே அவர் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார். இன்று விஜயுடன் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் போட்டி போடும் நிலை உள்ளது.
விஜயக்கு எப்படி சினிமா பின்னணி உள்ளதோ அதே போன்ற பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கும் உள்ளது. கரீனா நடிக்க வந்த புதிதில் அவருடைய படங்களில் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ரியாக்ஷன், டான்ஸ் ஸ்டெப் இருக்கும். இந்த கரீனா நடிக்க லாயக்கில்லை, சீக்கிரம் மூட்டையை கட்டிவிடுவது நல்லது என்று பாலிவுட்டில் உள்ள சிலர் விமர்சித்தனர்.
கரீனா பாலிவுட்டில் இருந்து ஓடுவதற்கு பதிலாக தனது நடிப்புத் திறனை மேம்படு்த்தி இந்தி திரையுலகில் நம்பர் 1 நாயகியானார். கோடி, கோடியாக கொட்டி கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். கிட்டத்தட்ட ஹீரோ ரேஞ்சுக்கு தற்போது உள்ளார் கரீனா. அவரை விமர்சித்தவர்கள் தங்கள் முகங்களை எங்கே கொண்டு போய் வைப்பது என்று தெரியாமல் விழிக்கின்றனர்.
இப்படி தங்களை லாயக்கே இல்லாதவர்கள் என்று நினைத்தவர்கள் முன்பு சாதித்தவர்கள் விஜயும், கரீனாவும்.
Post a Comment