சென்னை: பாலிவுட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்று தனக்கு ஆசையில்லை என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமந்தா கூறுகையில்,
எனக்கு பணம் முக்கியம் இல்லை. கதை தான் முக்கியம். முதலில் எனது கதாபாத்திரம் குறித்து கேட்ட பிறகே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வேன். எனக்கு பாலிவுட்டில் பெரியாளாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது என்றார்.
அப்போ தமன்னாவும், இலியானாவும் பாலிவுட்டில் பெரிதாக வர விரும்புகிறார்களே என்றதற்கு அவர், அவர்கள் 2 பேரின் சொந்த ஊர் மும்பை. அதனால் அவர்கள் அங்கே பெரிய நடிகையாக விரும்புகிறார்கள். எனக்கு தென்னிந்தியாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது தான் ஆசை என்றார்.
சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ஏற்கனவே கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார் சமந்தா. இந்நிலையில் அவர் தெலுங்கில் நடித்த எட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த படம் புத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் பாலிவுட் ஆசை இல்லை என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக்க தனக்கு ரூ.1.25 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார்.
Post a Comment