சென்னை: எனக்கு எதிராக சிலர் சதி செய்து வருகின்றனர். இதனால்தான் என் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்படுகின்றன. அதை சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகை புவனேஸ்வரி கூறியுள்ளார்.
தியேட்டரில் வன்முறையில் ஈடுபட்டது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் புவனேஸ்வரி. அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவரை போலீஸார் இன்று 3 வழக்கில் ஆஜர்படுத்தினர்.
அப்போது கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த புவனேஸ்வரி போலீஸ் வேனில் ஏறுவதற்கு முன்பு அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம், என் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்வதற்கு சதி வேலையே காரணம். இதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் விரைவில் இந்த சதிகள் அம்பலமாகும். சட்டப்படி என் மீதான வழக்குகளை சந்திப்பேன் என்றார்.
மனம் கோணாதபடி கவனிக்குமாறு கூறிய போலீஸ் அதிகாரி
இதற்கிடையே புவனேஸ்வரியை சிறையில் மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுமாறு ஒரு போலீஸ் அதிகாரி, சிறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பரிந்துரைத்ததாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் போலீஸ் தரப்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.
Post a Comment