மும்பை: அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா பச்சனை இனிமேல் லோக்சபா தேர்தலில் போட்டியிடவேக் கூடாது என்று கூறிவிட்டார். அதன்படி இனி ஜெயா பச்சன் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டாராம்.
இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யான ஜெயா பச்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இனி லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று எனது கணவர் அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டார். அதனால் நான் இனி லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளால் தான் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு இந்தியாவுக்குள் நுழைந்தது என்று கூறுகிறார்கள்.
இந்த விவகாரத்தை ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரித்தபோது எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது சமாஜ்வாடி கட்சி தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதனால் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் ஒன்று தான் என்று சொல்வது தவறு என்றார்.
Post a Comment