விஜய் இருந்தா ஆடமாட்டேன்: பிந்து மாதவி அடம்

|

Bindu Gets Scared Vijay

சென்னை: நடிகர் விஜய் இருந்தால் டான்ஸ் ஆட மாட்டேன் என்று பிந்து மாதவி அடம்பிடித்தாராம்.

சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

தனது உறவினர் ஸ்னேகா பிரிட்டோ இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படப்பிடிப்புக்கு விஜய் சென்றுள்ளார். அப்போது டான்ஸ் காட்சியை படமாக்கியுள்ளனர். விஜயைப் பார்த்ததும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த பிந்து மாதவி வெடவெடத்துப் போனாராம். அய்யய்யோ விஜய் எவ்வளவு பெரிய டான்சர், அவருக்கு முன்னால் நான் எப்படி ஆடுவது என்று திகைத்துவிட்டாராம்.

மேலும் விஜய் செட்டைவிட்டுப் போகும் வரை தான் டான்ஸ் ஆட முடியாது என்றும் தெரிவித்தாராம். ஆனால் விஜய் இடத்தைக் காலி செய்ய மறுத்து அங்கேயே இருந்துள்ளார். பின்னர் வேறு வழியின்றி பிந்து மாதவி ஆடியுள்ளார். அதைப் பார்த்து விஜய் நல்லாத் தானே ஆடுகிறீர்கள் அப்புறம் ஏன் பயம் என்று சொல்லிவி்ட்டு வந்துள்ளார்.

அடடா நான் நன்றாக டான்ஸ் ஆடுகிறேன் என்று விஜயே சொல்லிவி்ட்டாரே என்று பிந்து பூரித்துப்போயிருக்கிறார்.

 

+ comments + 1 comments

4 January 2013 at 13:55

vijaynext move

Post a Comment