சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது பிறந்த நாளில் நேரில் பார்த்த திருப்தியை அனுபவிக்க விடாமல் ரசிகர்களை துடிக்க வைத்துவிட்டது ஒருவரது செயல். அது, சத்தியநாராயணா எனும் ரஜினியின் முன்னாள் உதவியாளரின் அறுவறுக்கத்தக்க வார்த்தைகள்!
கிட்டத்தட்ட 4 ஆண்டு காலம் இந்த சத்தியநாராயணா தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருந்து வந்தனர் ரசிகர்கள். 2009-ம் ஆண்டு அவரை மன்றப் பணிகள் உள்பட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் ஒதுக்கி வைத்தார் ரஜினி. காரணம் அவருக்கு ஓய்வு தேவை என்பதால் இந்த நடவடிக்கை என நாசூக்காக சொல்லிவிட்டார் ரஜினி.
உண்மையான காரணம், ரசிகர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் கொஞ்சமும் பொறுப்பற்று சத்தியநாராயணா நடந்து கொண்டதுதானாம். அவர் மீது புகார் பட்டியல் வாசிக்காத மாவட்ட நிர்வாகிகளே இல்லை எனும் அளவுக்கு நிலைமை கைமீறியதால்தான், சத்தியநாராயணாவுக்கு பதில் சுதாகரை நியமித்தார் ரஜினி.
கடந்த நான்கு ஆண்டுகளில் ரஜினி பிறந்த நாள் உள்பட எந்த விசேஷத்திலும் சத்தியநாராயணா தலை காட்டாமல் இருந்தார்.
இந்த நிலையில், நேற்று திடீரென ரஜினி பிறந்த நாள் விழாவில் அவர் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தார். அவரை பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பார்த்த சில ரசிகர்கள், பழக்க தோஷத்தில், 'வணக்கம் சத்தி சார்' என்று ஆரம்பிக்க, 'போடா டேய்... போடா... ம..று' என்று சத்தியநாராயணா பதிலுக்கு வணக்கம் வைக்க, ஆடிப் போய்விட்டார்கள் ரசிகர்கள்.
அதுவும் ரஜினி மேடைக்கு வந்ததும், அங்கிருந்த ரசிகர்கள் ஆர்வத்தில் தலைவா என்று பெரும் குரல் எழுப்ப, அவர்களை சத்தியநாராயணா திட்டிய விதம் சொல்லத் தரமற்றது.
"இன்னும் என்னடா பண்றீங்க.. போங்கடா... போடா... போதும் பார்த்தது போடா... ம..று... கழுத்தைப் புடிச்சி தள்ளிடுவேன்... ங்...தா" என்று வெறிபிடித்தவர் போல கத்திக் கொண்டிருக்க, ரசிகர்கள் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தனர்.
ஆனால் சில இளம் ரசிகர்கள், "யோவ் நாங்க தலைவருக்காக வந்திருக்கோம்.. உன்னை யாருய்யா உள்ள விட்டது... நீ போய்யா வெளியே," என்று திருப்பித் தரவும் தயங்கவில்லை!
Post a Comment