பல லட்சத்திற்கு ஏலத்திற்கு வரும் மடோனாவின் 'புல்லட்' பிரா!

|

லண்டன்: பாப் பாடகி மடோனா ஒரு இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்த பிரா, தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. பல லட்சத்திற்கு இந்த பிரா ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15k madonna madonbra
புல்லட் பிரா என்று இந்த பிராவுக்குச் செல்லப் பெயரும் உண்டு. காரணம், புல்லட்டைப் போல படு ஷார்ப்பாக இதன் நுனிப்பகுதி இருக்கும். மடோனாவுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது இது. இந்த பிராவை அணிந்து 1990ல்நடந்த இசைச் சுற்றுப்பயணத்தில் ஆடிப் பாடினார் மடோனா. இந்த பிராதான் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.

இந்த பிராவைத் தயாரித்தது ஜீன் பால்கால்டியர் நிறுவனமாகும். இந்த பிராவை தற்போது பிரபல கிறிஸ்டி நிறுவனம் ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. குறைந்தது ரூ. 13லட்சத்திற்கு இந்த பிரா ஏலம் போகும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.

அடேங்கப்பா... ஒரு பிராவுக்கு இவ்ளோ கிராக்கியா...

 

Post a Comment