
சென்னை : பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்தவர், வேல்முருகன். தற்போது 'எவன்டி உன்ன பெத்தான்?' படத்தை எழுதி இயக்குகிறார். பி டீம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. புதுமுகங்கள் ரகு, கரீஷ்மா ஜோடி. மற்றும் சங்கிலி முருகன், இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, காசி விஷ்வா. இசை, 'சொல்லாமலே' பாபி. பாடல்கள்: பேரரசு, திரைவண்ணன், தமிழமுதன். வேல்முருகன் கூறும்போது, 'காதலை எத்தனையோ கோணங்களில் சொல்லிவிட்டார்கள். இதில், காடுகளில் இளம் காதல் ஜோடி சந்திக்கும் பிரச்னைகளை சொல்கிறேன். இதற்காக அடர்ந்த காடுகளில் ஷூட்டிங் நடக்கிறது' என்றார்.
Post a Comment