ஜெயித்தாலும் தோற்றாலும் பார்ட்டி

|

சென்னை : அஸ்வின் ஸ்டுடியோஸ் ஆரூர் சுந்தரம், பி.எம்.முகமது மொய்தீன், பி.எம்.ஜெயிலுல்லாப்தீன் வழங்கும் என்.ஜி.பி பிலிம்ஸ் சார்பில் நவநீதன் கணேசன் தயாரிக்கும் படம், 'அடுத்த கட்டம்'. மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். முரளி கிருஷ்ணன் முனியன் இயக்கி உள்ளார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் இயக்குனரும், நடிகருமான வ.கவுதமன் பேசும்போது, 'திரையுலகில் இருப்பவர்கள்தான் படங்களை கொச்சைப்படுத்தவும் செய்கிறார்கள். சக கலைஞனை கொண்டாட வேண்டாம். அவன் மனதைப் புண்படுத்தாமலாவது இருக்கலாம். இங்கே ஜெயித்தாலும் பார்ட்டி. தோற்றாலும் பார்ட்டி. முதல் ரீல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே படம் பற்றி தவறாக எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். தமிழ் சினிமாவை நாம் கொண்டாடவில்லை என்றால், வேறு யார் கொண்டாடுவார்கள்?' என்றார்.
விழாவில் ஸ்ரீகாந்த், சம்பத் ராம், ராஜகுமாரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Post a Comment