சென்னை: ஏர்டெல்லுடன் வீடியோகான் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்புகின்றன.
'விஸ்வரூபம்' படத்தை டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்புவதில் கமல் உறுதியாக நிற்கிறார். அதுவும் தியேட்டர்களில் வெளியாவதற்கு 8 மணி நேரம் முன்பே இந்தப் படம் டிடிஎச்சில் வெளியாகிறது.
இதற்காக இணைப்புக்கு ரூ 1000 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளனர். தியேட்டர்களில் வெளியாகும்போது இந்தப் படம் ஆரோ 3டி என்ற நவீன ஒலி தொழில்நுட்பத்தில் வெளியாகும்.
அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந்தேதி படம் ரிலீசாகிறது. ஒருநாள் முன்னதாக 10-ந்தேதி இரவு 'விஸ்வரூபம்' படம் டி.டி.எச். மூலம் டி.வி.யில் ஒளிபரப்பப்படும்.
முதலில் ஏர்டெல் நிறுவனம் மட்டுமே இதில் இருந்தது. ஆனால் இப்போது ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய 3 டி.டி.எச்.கள் மூலம் படத்தை ஒளிபரப்ப உள்ளனர்.
இதன் மூலம் டி.டி.எச். இணைப்பு வைத்துள்ள பெரும்பான்மையோர், வீடுகளில் இருந்தே படத்தை பார்க்க முடியும். கமல் முடிவுக்கு தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் தியேட்டர் அதிபர்களும் வினியோகஸ்தர்களும் இதனை எதிர்த்து வருகிறார்கள்.
டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் திரையரங்குகளில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். அவர்களுடன் கமல் நடத்திய சமரச பேச்சு தோல்லியில் முடிந்தது. தனது முடிவில் கமல் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்க தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்களின் கூட்டு கூட்டம் வருகிற 20-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
Post a Comment