37 வயதாகும் ஏஞ்சலினா ஜூலி, 6 குழந்தைகளின் தாய். இருங்க... இந்த 6 குழந்தைகளும் அவர் பெற்றவை அல்ல... தத்துப் பிள்ளைகள். ஜூலிக்கு இன்னும் திருமணமாகாவிட்டாலும், அவர் பிரபல நடிகர் பிராட் பிட்டுடன் சேர்ந்து வாழ்கிறார்.
இந்த நிலையில், இவர் சினிமாவுக்கு முழுக்குபோட திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை அவரே தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை வளர்க்க போதிய நேரமின்மையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "சினிமாவை விட்டு விலகி குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க விரும்புகிறேன். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவேன். ஏனெனில் விவரம் தெரிந்த பிறகு அவர்கள் தங்கள் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்வார்கள். இந்த முடிவை நாளையே எடுத்தாலும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்," என்றார்.
தனது பார்ட்னர் பிராட் பிட்டுடன் இன்னும் இது பற்றி விவாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment