எதையும் நேர்மறையாக அணுகுங்கள்! - ரசிகர்களுக்கு ரஜினி பிறந்த நாள் செய்தி

|

Always Think Positive Rajini Birthday Message   

எந்த விஷயத்தையும் நேர்முகமாக அணுகுங்கள் என ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பிறந்த நாளில் செய்தி விடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் அபூர்வ தேதியான 12.12.12-ல் ரஜினி பிறந்த தினம் அமைந்துள்ளது.

வழக்கமாக தனது பிறந்த நாளன்று வீட்டில் இல்லாத ரஜினி, இந்த ஆண்டு இந்த நாளின் சிறப்பைக் கருதியும், ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றும் வீட்டில் இருந்தார். ரசிகர்களையும் சந்தித்தார்.

காலை 5 மணியிலிருந்தே ரசிகர்கள் அவரது வீட்டு முன் திரள ஆரம்பித்துவிட்டனர்.

ரஜினி வீட்டு வாசலிலிருந்து சில அடி தூரத்தில் ரசிகர்கள் நிறுத்தப்பட்டனர். 9 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்தார் ரஜினி. பட்டு வேட்டி சட்டையில் வந்த ரஜினி, வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் ஏறி நின்று ரசிகர்களைப் பார்த்து சிரிப்புடன் கையசைத்து வணக்கம் தெரிவித்தார் ரஜினி.

கூடியிருந்த கட்டுக்கடங்காத கூட்டம் அவரைப் பார்த்து தலைவா... ஹேப்பி பர்த்டே என்று சந்தோஷத்தில் பெருங்குரலில் வாழ்த்த, அதை புன்முறுவறுவலுடன் ஏற்றுக் கொண்டார்.

ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ரஜினி, குடும்பத்தை சிறப்பாக கவனிக்குமாறும், எந்த விஷயத்தையும் நேர்மறையாக அணுகும்படியும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சிறிது நேரம் நின்றபடி வாழ்த்துக்களைப் பெற்ற ரஜினி பின்னர் வீட்டுக்குள் சென்றார்.

ஆனால் கூட்டம் தொடர்ந்து வந்தபடி இருந்ததால், மூன்று முறை வந்து ரசிகர்களைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

 

Post a Comment