நீதானே என் பொன் வசந்தம்... பார்க்க மறுத்த சென்சார் குழு

|

நீதானே என் பொன்வசந்தம் படத்தை சென்சார் அதிகாரிகள் பார்க்க மறுத்து திருப்பியனுப்பிவிட்டார்களாம்.

censor board rejects neethane en ponvasantham print   
கவுதம் மேனன் இயக்கத்தில், இளையராஜா இசையில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வரும் 14-ம் தேதி வெளியாகவிருக்கும் படம் நீதானே என் பொன்வசந்தம்.

இந்தப் படத்தின் முதல் பிரதியை சென்சாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பிரதி பைலட் காப்பியாக இருந்ததாம். வசன உச்சரிப்பு பொருந்தாமலும், இசை காட்சிகளுடன் சேராமலும் இருந்துள்ளது அந்தப் பிரதியில்.

தவறுதலாக இந்த பைலட் காப்பியைக் கொடுத்துவிட்டார்களா... அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது தெரியவில்லை. எனவே இந்தப் பிரிண்டை பார்க்க முடியாது என சென்சார் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

படம் ரிலீசுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால், வேறு பிரிண்டைக் கொடுத்து சென்சார் சான்று வாங்கும் பணியில் தீவிரமாக உள்ளார்களாம்.

 

Post a Comment