தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே டிடிஎச்சில் வெளியாகிறது கமலின் விஸ்வரூபம்.
வரும் ஜனவரி 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தப் படத்தை இந்தியா முழுவதும் டிடிஎச்சில் பார்க்கலாம்.
தமிழ் மற்றும் தெலுங்கு விஸ்வரூபத்தை ஏர்டெல் டிடிஎச்சின் பணம் கட்டிப் பார்க்கலாம். தமிழுக்கு ரூ 1000 ம், தெலுங்குக்கு ரூ 500 ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கமல் அறிவிப்புப்படி, தியேட்டர்களில் வெளியாவதற்கு (வெளியாகுமா?!) 12 மணி நேரம் முன்னதாக டிடிஎச்சில் தமிழ், தெலுங்கு விஸ்வரூபத்தைக் காணலாம்.
இந்தியில் விஸ்வரூப் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ரூ 500 கட்டணமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது,
இதுகுறித்து கமல் விடுத்துள்ள அறிக்கையில், "ஏர்டெல்லுடன் இணைந்து நாட்டிலேயே முதல் முறையாக புதிய முறையில் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்பமும் பொழுதுபோக்கும் கைகோர்த்தால் மேலும் பெரிய உயரங்களை அடை முடியும் என்பதற்கு உதாரணமைாக விஸ்வரூபம் திகழும். அதிக பார்வையாளர்கள் அவர்கள் வீடுகளிலிருந்தபடியே வசதியாக விஸ்வரூபத்தைப் பார்க்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.
ஏர்டெல்லுடன் வீடியோகானும் இணைந்து விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுகிறது. வீடியோகான்தான் அதிக டிடிஎச் சந்தாதாரர்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment