சென்னை: விஸ்வரூபம் படத்தின் டிடிஎச் வெளியீட்டு விவகாரம் ஒருபக்கம் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்க, கமல் ஹாஸனோ அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிஸியாகிவிட்டார்.
ஒரே நாளில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துகிறார். இதில் மதுரை, கோவையில் நிகழ்ச்சி நடக்கும் இடங்களை நான்கு தினங்களுக்கு முன்பே அறிவித்துவிட்ட கமல், சென்னையில் மட்டும் எங்கே நிகழ்ச்சி நடக்கிறது என்பதை சொல்லாமல் இருந்தார்.
இன்றுதான் இடத்தை அறிவித்துள்ளார். அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இசை வெளியீட்டை நடத்துகிறார் கமல்.
சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ள விஸ்வரூபம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஏற்கெனவே ஜெயா டிவி வாங்கிவிட்டது. இப்போது இசை வெளியீடு நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையும் பெற்றுள்ளது. மூன்று நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் ஜெயா டிவிதான் ஒளிபரப்பப் போகிறது.
திறந்தவெளி மைதானத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்துவது கமலுக்கு புதிதல்ல. ஏற்கெனவே தனது விருமாண்டி பட இசை வெளியீட்டை கேம்பகோலா மைதானத்தில் பிரமாண்டமாக நடத்தியவர் கமல் என்பது நினைவிருக்கலாம்.
Post a Comment