இப்போது அமைச்சர் சசி தரூருடன் சந்திப்பு... அடுத்து சோனியாவுடனா? - த்ரிஷா ப்ளான் என்ன?

|

Actress Trisha Meets Minister Sashi Tharoor

மத்திய அமைச்சர் சசிதரூரைச் சந்தித்துப் பேசினார் நடிகை த்ரிஷா. நகைக் கடை திறப்பு விழா ஒன்றிற்காக திருவனந்தபுரத்துக்கு த்ரிஷா சென்றபோது இந்த சந்திப்பு நடந்தது.

இருவருமே அந்த விழாவுக்கு சிறபர்பு விருந்தினர்கள் என்பதால், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

இதுகுறித்து திரிஷா கூறும்போது, "அமைச்சர் சசிதரூர் எல்லோரையும் வசீகரிக்ககூடிய தலைவர். நல்ல சிந்தனையாளர். அவரை திருவனந்தபுரத்தில் சந்தித்தது இனிமையாக இருந்தது. எனது நடிப்பை பாராட்டினார்," என்றார்.

த்ரிஷா நடிக்க வந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகின்றன. கிட்டத்தட்டட 10 ஆண்டுகாலம் தொடர்ந்து முதல் நிலை நாயகியாக இருந்து வருகிறார்.

இப்போதும் அவர் கைவசம் தமிழில் மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. தெலுங்கிலும் மூன்று படங்களில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் ரம் என்ற படத்திலும் இவர்தான் நாயகி.

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் புகழோடு உள்ள த்ரிஷாவுக்கு சமூக நலப் பணிகளில் ஆர்வம் அதிகம். இப்போதுதான் அமைச்சருடன் சந்திப்பு நடந்திருக்கிறது. அடுத்து சோனியாவுடனா? என்றால் புன்னகையோடு நழுவுகிறார்!!

 

Post a Comment