பாலிமர் தொலைக்காட்சியில் டிசம்பர் 10 முதல் ‘வல்லமை தாராயோ' என்ற புதிய மெகாத் தொடர் ஒளிபரப்பாகிறது.
நேரடி தமிழ் தொடர்கள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானாலும் சில தொலைக்காட்சிகளில் இந்தி தொடர்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பாகின்றன. நல்ல தொடர்களுக்கு தமிழ் ரசிகர்கள் வரவேற்பு தருகின்றனர் என்பதால் தமிழ் சேனல்களில் இந்தித் தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகின்றன. அதுபோல் ‘வல்லமை தாராயோ' தொடரும் இந்தி தொடரின் மொழிபெயர்ப்புதான்.
ஒரு பெண் வாழ்க்கையில் ஜெயிக்க அழகு முக்கியமல்ல திறமைதான் முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தும் தொடர் இது.
இந்த தொடரின் நாயகி சக்தி நல்ல மனம் படைத்தவர், திறமையானவள், வித்தியாசமானவள். கலகலப்பான நல்ல மனம் கொண்ட சக்தியைப் போல ஒருவள்தான் இருப்பாள். அவளை பார்க்க வேண்டுமெனில் பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு பாருங்கள் என்கின்றனர் தொடர் ஒளிபரப்பாளர்கள்.
Post a Comment