சென்னை: புகைப் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதிலிருந்து, புகைப் பிடிப்பதற்கு எதிரான போராட்டங்களில் ரஜினி ரசிகர்கள் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
முதல் கட்டமாக சைதை ரசிகர்கள் சிகரெட்டை சாலையில் கொட்டி எரித்து புகைப் பழக்கத்துக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் உடன் பிறந்த ஸ்டைலாக முன்பு திகழ்ந்தது புகைப் பிடிப்பது. இன்று உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நிலைக்கு மூல காரணமே சிகரெட் பழக்கம்தான் என்று ரஜினி உணர்ந்து, மது மற்றும் சிகரெட் பழங்கங்களை கைவிட்டுவிட்டார்.
சமீபத்தில் நடந்த சென்னை மாவட்ட ரசிகர்கள் விழாவில், "என் உடல்நிலை இவ்வளவு மோசமானதற்குக் காரணம் மது மற்றும் சிகரெட் பழக்கங்கள்தான். கெட்ட சகவாசத்தால் வந்து சேர்ந்த பழக்கங்கள் இவை. என் நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதித்தது புகைப் பழக்கம்.
எனவே என் ரசிகர்கள், இன்றே புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும். மது அருந்தாமலிருக்க வேண்டும்," என்று வேண்டுகோள் விடுத்தார் ரஜினி.
தலைவரின் இந்த வேண்டுகோள் ரசிகர்கள் மத்தியில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும், ஆங்காங்கே சிகரரெட் பழக்கத்துக்கு குட்பை சொல்லி, சிகரெட்டுகளை ஒன்றாக சாலையில் கொட்டி எரித்து வருகின்றனர் ரசிகர்கள். இதில் சில பொதுமக்களும் கலந்து கொண்டு, புகைப்பழக்கத்தை விடுவதா சபதம் எடுத்துள்ளனராம்.
இங்கே நீங்கள் பார்ப்பது, சைதை பகுதி ரசிகள் சிகரெட்டை சாலையில் போட்டு எரிக்கும் காட்சியை!
இது மட்டுமல்ல, இனி சிகரெட் மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்திலும் தீவிரமாக இறங்கப் போவதாக ரசிகர் மன்றங்கள் அறிவித்துள்ளன.
Post a Comment