ஷூட்டிங்கில் காயம் அடைந்த அஜீத்துக்கு ஆபரேஷன்

|

Operation to Ajith ஷூட்டிங்கில் காயம் அடைந்த அஜீத்துக்கு ஆபரேஷன் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜீத். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கில் சண்டை காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு கால் எலும்பில் அடிபட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அடிபட்ட இடத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினர். படத்தின் முக்கிய காட்சிகள் படமாகி வருவதால் ஆபரேஷனை தள்ளிப்போட்டார் அஜீத். கையில் ஸ்டிக் ஊன்றியபடி ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

விரைவில் அவருக்கு ஆபரேஷன் நடக்க உள்ளது. இது பற்றி பட யூனிட் தரப்பில் கூறும்போது, 'அஜீத்துக்கு ஆபரேஷன் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். தற்போது ஒப்புக்கொண்டிருக்கும் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்துகொள்வார். வலியை பொறுத்துக்கொண்டு அவர் முழு அர்ப்பணிப்புடன் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதைக் கண்டு பலர் ஆச்சர்யம் அடைந்தனர். அவர் தொழில் ரீதியான நடிகர் என்பதை உணர்த்திவிட்டார் என்றனர். இதற்கிடையில் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் ஐதராபாத்தில் நடக்க உள்ள சிறுத்தை சிவா இயக்கும் பட ஷூட்டிங்கில் அவர் கலந்துகொள்கிறார்.
 

Post a Comment