ஒரு சேனல் விடாமல் ஓடி ஓடி பேட்டி கொடுக்கும் ‘நீர்பறவை’ டீம்

|

Neerparavai Couples Celebrate Tv Ch

எந்த சேனல் திருப்பினாலும் இப்போது நீர்ப்பறவை குழுவினரின் பேட்டியாகவோ, அல்லது அந்த படத்தின் நடிகர்கள் பங்கேற்றும் போட்டியோதான் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

சன் டிவியில் விருந்தினர் பக்கத்தில் கடந்த வாரம் தொடங்கி இந்த வாரம் வரை நீர்பறவை குழுவினர் ஒவ்வொருவராக வந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தொடங்கி, இசையமைப்பாளர் ரகுநந்தன் கதாநாயகி சுனைனா வரை வந்து தனித்தனியாக பேட்டி கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். இது போதாது என்று கடந்த வாரம் சிறப்புக் கொண்டாட்டம் வேறு சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். நேற்றைக்கு சிறப்பு விமர்ச்சனமும் நீர்பறவைதான்.

விஜய் டிவியில் பேட்டிகள் ஒரு பக்கம் இருந்தாலும் கேம் ஷோக்களிலும் கூட நீர்பறவை நடிகர்கள்தான் பங்கேற்கின்றனர். சனி இரவு ஒளிபரப்பாகும் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியில் கதாநாயகன் விஷ்ணு, நாயகி சுனைனா பங்கேற்று விளையாடினார்கள்.

கலைஞர் டிவியில் கேட்கவே வேண்டாம். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள படம் என்பதால் எதற்கெடுத்தாலும் நீர்பறவை குழுவினரின் பேட்டிதான் இடம்பெறுகிறது.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு இதுபோன்ற ப்ரமோட் செய்வதற்கும், கைதூக்கி விடுவதற்கும் சேனல்கள் இருப்பதில்லை. அதே சமயம் பெரிய நிறுவனங்கள் இதனை வெளியிட்டால் போட்டி போட்டுக்கொண்டு படத்தை ப்ரமோட் செய்கின்றனர் என்று கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.

 

Post a Comment