செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இயக்குநரை பளார் விட்ட சார்மி!

|

Sex Torture Charmi Slapped Director   

புதுப் படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் ஆசைக்கு இணங்குமாறு டார்ச்சர் கொடுத்த இயக்குநரின் கன்னத்தில் பளார் விட்டு, ஆந்திர திரையுலகை அதிர வைத்துள்ளார் நடிகை சார்மி.

தமிழில் சிம்பு ஜோடியாக அறிமுகமாகி, படவாய்ப்புகள் இல்லாததால் தெலுங்குக்குப் போன சார்மி, அங்கே முன்னணி நாயகியானார்.

நாகார்ஜூனா, பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர், சித்தார்த் ரவி தேஜா போன்ற பெரிய நடிகர்களுடன் ஏராளமான வெற்றிப் படங்களையும் தந்தார். தமிழில் அவ்வப்போது ‘ஆஹா எத்தனை அழகு', ‘லாடம்' என சில படங்களில் நடித்தார்.

கவர்ச்சியின் எல்லை வரைப் போய்விட்டவர் சார்மி. இனி அவரிடம் காட்ட ஒன்றுமில்லை என்று தெலுங்குப் பட இயக்குநர்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ... வாய்ப்பு தராமல் விட்டுவிட்டார்கள்.

செம கடுப்பான சார்மி, தனக்கு தெரிந்த இயக்குநர்களுக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்க ஆரம்பித்தார்.

அப்படித்தான் பிரபல தெலுங்கு இயக்குனர் ஹரீஷ் சங்கர் தனது படத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறவே, அவரது அலுவலகத்துக்கு கதை கேட்கச் சென்றுள்ளார் சார்மி்.

அங்கு தனி அறையில் மெல்ல கதை சொல்ல ஆரம்பித்த இயக்குநர், பின்னர் ஏடாகூட செயலில் இறங்கினாராம். சார்மி எதிர்ப்பு காட்டவே, படுக்கையைப் பகிர்ந்து கொள்ள சம்மதித்தால் வாய்ப்பு தருவேன் என்று கூறினாராம்.

இதனால் அதிர்ந்து போன சார்மி, இயக்குநர் ஹரீஷ் சங்கர் கன்னத்தில் ஒரு அறைவிட்டுவிட்டு கோபமாக வெளியேறினார்.

இந்த சமாச்சாரத்தை சார்மியே தனக்கு வேண்டிய நிருபர்களை போனில் அழைத்து சொல்ல, விஷயம் காட்டுத் தீ போல பரவிவிட்டது ஆந்திர திரையுலகில்.

 

Post a Comment