வயசுப் போச்சுன்னா நடிக்க முடியாதுல்ல: ஸ்ருதி ஹாசன்

|

Fainting Is Quite Common Shruti   

மும்பை: ஓய்வின்றி உழைத்ததால் நான் மயங்கி விழுந்தது சாதாரண விஷயம் தான். வயது போனதென்றால் நடிக்க முடியாதல்லவா என்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

நடிகை ஸ்ருதி ஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். ஆனால் தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம். உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திற்கும் இசையமைக்கவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில்,

இசை என்னுடன் தான் இருக்கிறது. அது எங்கும் போகவில்லை. வயது போனால் சில கதாபாத்திரங்களில் நடிக்க முடியாதில்லையா அதனால் தான் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். ஷூட்டிங்கிற்காக விமானத்தில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்ததால் டயர்ட் ஆகிவிட்டேன். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மயங்கினேன். சினிமாவில் ஓய்வில்லாமல் உழைப்பதால் மயங்கி விழுவது சகஜம் தான். நான் மயங்கி விழுந்தது சாதாரண விஷயம். தமிழில் நல்ல திரைக்கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

 

Post a Comment