பொம்மலாட்டத்தில் சண்டித்தனம் செய்யும் ப்ரீத்தி!

|

Preethi S Negative Role Bommalattam

பற்பல வேடங்களில் நடித்து, இடையில் திரு்மணமாகி வீட்டோடு செட்டிலாகியிருந்த ப்ரீத்தி இப்போது தனது குழந்தை ஓரளவுக்கு வளர்ந்து விட்டதைத் தொடர்ந்து மறுபடியும் நடிப்புக் களத்தில் குதித்துக் கலக்க ஆரம்பித்துள்ளார்.

மறுபடியும் வெரைட்டியாக வெளுத்து வாங்கி வரும் ப்ரீத்தி, பொம்மலாட்டம் தொடரில் வில்லத்தனத்திலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

சிஏ படித்துள்ள ப்ரீத்தி நடிக்க வந்ததே சுவாரஸ்யமான விஷயம்தான். ஆடிட்டர் வேலையா, நடிப்பா என்ற கேள்வி வந்தபோது நடிப்பையே தேர்ந்தெடுத்தார் ப்ரீத்தி. அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்த அவரும், சக டிவி நடிகரான சஞ்சீவும் காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டனர். உடனடியாக குழந்தையையும் பெற்றெடுத்தார் ப்ரீத்தி. இதனால் கடந்த இரண்டரை வருடங்களாக நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது குட்டிப் பாப்பா வளர்ந்து விட்டதால் மறுபடியும் நடிக்க வந்துள்ளார். ப்ரீத்தி மறுபடியும் நடிக்க கணவர் சஞ்சீவும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம். தற்போது மனதில் உறுதி வேண்டும், பொம்மலாட்டம் தொடர்களில் நடித்து வரும் ப்ரீத்தி, பொம்மலாட்டம் தொடரில் வில்லத்தனத்திலும் கலக்கி வருகிறார்.

வீட்டுக்கு அடங்காத, யாருக்கும் பணியாத அல்ட்ரா மாடர்ன் பணக்காரப் பெண்ணாக கலக்கி வருகிறார் ப்ரீத்தி.

வீட்டுக்காரர் சஞ்சீவ் திருமதி செல்வத்தில் அதிரடி செய்து கொண்டிருக்கிறார்... ப்ரீத்தி பொம்மலாட்டத்தில் வெளுத்துக் கட்டி வருகிறார்.. செம ஜோடிதான்.

 

Post a Comment