கோச்சடையான் வெற்றிபெற்றால், இலக்கியம் - இதிகாசங்களைப் படமாக்கும் முயற்சி வெற்றி பெறும் - ரஜினி

|

Rajini Speaks On Kochadaiyaan

சென்னை: கோச்சடையான் வெற்றி பெற்றால் இலக்கியங்கள், இதிகாசங்களைப் படமாக்கும் முயற்சி வெற்றி பெறும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தனது பிறந்த நாளையொட்டி இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ரஜினி.

அதற்கு முன் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த நாள் 12.12.12 ரொம்ப விசேஷமான நாள். இந்த நாளில் எனக்கு வாழ்த்து சொல்லியிருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் எல்லோருக்குமே என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் சீரும் சிறப்பும் நீண்ட ஆயுளும் பெற வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்...

நான் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் கோச்சடையான் படம் வெற்றியடைந்தால் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் இதேபோல் வெளிவந்து வெற்றியடையும். கோச்சடையான் படத்தின் வெற்றி இன்றைய சினிமா தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்," என்றார்.

 

Post a Comment