விஸ்வரூபம்... தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்... சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் கமல்!

|

Kamal Release Viswaroopam On His Own   

படத்தை யாரும் வாங்கத் தயாராக இல்லாததால், சொந்தமாகவே ரிலீஸ் செய்கிறார் கமல்ஹாஸன்.

தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேனல் சார்பில் தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் வெளியிடுகிறார்.

முதல்கட்டமாக தமிழகத்தில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் வேலையை ஆரம்பித்துள்ளார் கமல். திரையரங்குகள் கிடைப்பதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஒரு பிரபல விநியோகஸ்தரின் துணையுடன் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்புவரை, இந்தப் படத்துக்கு ரூ 40 கோடி வரை விலை கொடுக்க தயாராக இருந்தனர் சில விநியோகஸ்தர்கள்.

ஆனால் படத்துக்கு ரூ 100 கோடி வரை விலை வைத்த கமல், மீதி ரூ 60 கோடியை எடுக்க, படத்தை தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடத் திட்டமிட்டார்.

இது தெரிந்து அதிர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் கமலுக்கு ரெட்கார்ட் போட முடிவு செய்தனர்.

நிலைமையின் விபரீதம் புரிந்து கமல் தன் டிவி ரிலீஸ் முடிவை கைவிட்டார். ஆனால் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் இல்லாத நிலை உருவாகிவிட்டது.

இப்போது விஸ்வரூபத்தை தன் ராஜ்கமல் பட நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் கமல். ஆனால் தியேட்டர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டதாம். காரணம் படத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ஆரோ 3 டி தொழில்நுட்பம். இந்த வசதி கொண்ட அரங்குகள் மிகக் குறைவு. எனவே மொத்தம் 250 முதல் 300 வரை தியேட்டர்கள் கிடைப்பதே பெரிய விஷயம் என்றாகிவிட்டது நிலைமை.

 

Post a Comment