திருமணப் புடவையை ஏலம் விடும் லிசா ரே: எதுக்கு தெரியுமா?

|

Lisa Ray Auction Her Wedding Sari

மும்பை: மாடலும், இந்தி நடிகையுமான லிசா ரே தான் திருமணத்தன்று அணிந்திருந்த புடவையை ஏலம் விட்டு அந்த பணத்தை தர்ம காரியங்களுக்கு பயன்படுத்த உள்ளார்.

மாடலும், பாலிவுட் நடிகையுமான லிசா ரே(40) கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி வங்கி அதிகாரியான ஜேசன் டெனி என்பவரை மணந்தார். திருமணத்தன்று சத்ய பால் டிசைனர் சேலையை அணிந்திருந்தார். இந்நிலையில் தான் திருமணத்தன்று அணிந்திருந்த புடவையை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை தர்மகாரியங்களுக்கு பயன்படுத்தப் போவதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த சேலை ஆன்லைனில் சத்ய பாலின் பேஸ்புக் பக்கத்தில் ஏலம் விடப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி லிசாவுக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதன் பிறகு அவர் உரிய சிகிச்சை பெற்று தற்போது நலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லிசா இந்திய அப்பாவுக்கும், போலந்தைச் சேர்ந்த அம்மாவுக்கும் கனடாவில் பிறந்தவர்.

 

Post a Comment