
சென்னை : பழம்பெரும் கலை இயக்குனர் சுப்பராயன் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. சில காலம் உடல் நலம் குன்றியிருந்த அவர், நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மறைந்த சுப்பராயன், பி.விட்டலாச்சார்யா இயக்கிய 'ஜகன் மோகினி', 'கந்தர்வ கன்னி' மற்றும் 'வசந்த மாளிகை', 'ரிக்ஷாக்காரன்', 'காவல்காரன்', 'மைதிலி என்னை காதலி' உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கும், என்.டி.ராமராவ் நடித்த தெலுங்குப் படங்களுக்கும் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றியுள்ளார். அவரது உடல் இன்று காலை போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. மறைந்த சுப்பராயனுக்கு சரோஜா என்ற மனைவியும் செல்வம் என்ற மகனும் உள்ளனர். இதில் செல்வம், ஆர்ட் டைரக்டர். கார்த்திக் நடித்த 'அழகான நாட்கள்' படத்தையும் தயாரித்தவர்.
Post a Comment