சென்னை: இந்த நூற்றாண்டின் வெகு அரிதான 12.12.12 தேதியில் பிறந்த நாள் கொண்டாடுர் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்த அனுபவத்தை மகிழ்ச்சியை முழுமையாகக் கொண்டாடக்கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான காந்தி இன்று திடீர் மரணம் அடைந்துவிட்டார்.
சென்னை ஏஜி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் காந்தி.
ராஜ்பகதூர், நட்ராஜ், விட்டல் போன்ற நெருக்கமான நட்பு வட்டத்தில் ஒருவராக இருந்த காந்தியுடன், பெங்களூரில் பயணிப்பது ரஜினிக்குப் பிடித்த விஷயமாம்.
காந்தியின் மரணத்தால் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ள ரஜினி, எதிலும் ஆர்வம் காட்டாமல் மௌனமாக இருந்து வருகிறாராம்.
Post a Comment