ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் களை கட்டும். மக்கள் தொலைக்காட்சியில் தமிழகம் தொடங்கி உலகம் முழுவமும் 2012ல் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை ஒளிபரப்புகின்றனர். மார்கழியின் சிறப்பு, பேசித்தீர்க்கலாம் வாங்க, புதியமுகம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர்.
2012 கடந்து வந்த பாதை
இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். 2012ம் ஆண்டு தமிழகம், இந்தியா, உலகம் என பிரித்து எதிர்கொண்ட சாதனைகள், சோதனைகளை பட்டியலிட்டு கடந்த வந்த பாதை நிகழ்ச்சியை டிசம்பர் 31ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்புகின்றனர்.
மக்கள் 2012
மக்கள் தொலைக்காட்சியில் 2012ம் ஆண்டு புதிதாக மலர்ந்த நிகழ்ச்சிகளை பற்றி ஓர் பார்வை. மக்கள் தொலைக்காட்சி பற்றி மக்கள் கருத்தினை கேட்கின்றனர். இது டிசம்பர் 31 இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஊர் சுற்றலாம் வாங்க
சென்னை நகரில் டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டு நிகழ்வுகள் களை கட்டும். அந்த உற்சாக கொண்டாட்டத்தினை இரவு 10.30க்கு ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறது.
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
புத்தாண்டு தினத்தில் காலை 6.30 மணிக்கு பாவை இசைவிழா உடன் சிறப்பு நிகழ்ச்சி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து புத்தாண்டு சிந்தனைகள், பிரபலங்களின் வாழ்த்துக்கள் ஒளிபரப்பாகிறது. உலகத் திரைப்படங்கள் குறித்து இந்திய திரைக்கலைஞர்களின் கருத்து ‘அயல்' என்ற பெயரில் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பேசும் பொம்மைகள்
புதிய சுவை நிகழ்ச்சியில் புத்தாண்டு கேக் தயாரிப்பது பற்றி 3 மணிக்கு கற்றுத் தருகின்றனர். தமிழகத்தின் மறந்து போன கலையான தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சி ‘பேசும் பொம்மைகள்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக 3.30 அன்று மக்கள் தொலைக்காட்சியில் மக்கள் காண ஒளிபரப்பாகிறது. இதைத்தொடர்ந்து மேற்கத்திய இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
மாதம் போற்றும் மார்கழி
புத்தாண்டு தினத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி செவிக்கு விருந்தளிக்க வருகின்றனர் இசைக் கலைஞர் சிவா மற்றும் அவரது மாணவியர். இது மாலை 06.05க்கு ஒளிபரப்பாகிறது.
பேசித் தீர்க்கலாம் வாங்க
புத்தாண்டு தினத்தில் பட்டிமன்றம், விவாதநிகழ்ச்சிகள் இடம் பெறுவது வழக்கம் மக்கள் தொலைக்காட்சியில்' பேசித்தீர்க்கலாம் வாங்க' நிகழ்ச்சியில் காரசாரமாக கலந்துரையாடுகின்றனர் தமிழ் அறிஞர்கள். இந்த நிகழ்ச்சி இரவு 07.02க்கு ஒளிபரப்பாகிறது.
புதிய முகம்
மக்கள் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்களும், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் இடம் மாறி தங்கள் பணியை செய்கின்றனர். அவங்க வேலையை இவங்க பார்த்த எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை ததும்ப சொல்கின்றனர்.
Post a Comment