நல்ல காலம் பொறக்குது...
மல்லுவுட்லயிருந்து கோலிவுட்டுக்கு வந்த பிருத்வி நடிகர் திடீர்னு பாலிவுட் மோகத்துக்கு மாற¤னாராம்... மாற¤னாராம்... அங்கேயே செட்லாயிடலாம்னு நெனச்ச திட்டத்துக்கு முதல் படமே மூடுவிழா பண்ணிடுச்சாம். முகர்ஜி நடிகையோட அவர் நடிச்ச பாலிவுட் படம் பெரிசா கைகொடுக்காததால வெறுத்துட்டாராம்... வெறுத்துட்டாராம்... இத்தனை நாள் பாலிவுட் படத்துக்காக ஓட்டல்ல தங்கி நடிச்ச வாழ்க்கை போரடிச்சிடுச்சாம். மீண்டும் மல்லுவுட் படங்கள்லயே நடிக்க முடிவு பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்...
பிரகாச வில்லன் நடிகரு பல படங்கள் நடிச்சாலும் டைரக்ஷன் ஆசை மட்டும் அவரை விட்டு போக மாட்டேங்குதாம்... மாட்டேங்குதாம்... ஏற்கனவே படம் இயக்கி, கையை சுட்டுக்கிட்டாரு. திரும்ப டைரக்ஷன்ல குதிக்கிறாராம். இது அவரோட வீட்டுக்காரம்மாவுக்கு பிடிக்கலையாம். டைரக்ஷன் எல்லாம் வேணாம். நடிப்புலேயே கவனம் செலுத்துங்கன்னு அட்வைஸ் பண்றாராம். ஆனா, நடிகரு கேட்க மாட்டேங்கிறாராம்... மாட்டேங்கிறாராம்...
லார நடன இயக்கத்தோட மூணாவது பார்ட் திகில் படத்துல தான்தான் ஹீரோயினா நடிக்கப்போறதா லட்சுமிகர நடிகை நெனச்சாராம்... நெனச்சாராம்... அந்த நெனப்புல மண்ணுவிழுந்துருச்சாம். டாப் நடிகை அந்த வாய்ப்ப பறிச்சிட்டாராம். இதனால லட்சு நடிகை ஏமாந்துட்டாராம்... ஏமாந்துட்டாராம்... இதுபத்தி இயக்கம் தரப்புல கேட்டா, 'டபுள் லாங்குவேஜ்ல படத்த இயக்கப் போறாரு. அதுக்கு தோதான ஹீரோயினைதான் செலக்ட் பண்ண முடியும்னு பதில் தர்றாங்களாம்... தர்றாங்களாம்...
Post a Comment