எனக்கும் த்ரிஷாவுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி... விஷால் புளகாங்கிதம்!

|

Vishal Hails Trisha S Performance Samar

சென்னை: எனக்கும் த்ரிஷாவுக்கும் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது சமர் படத்தில் என்கிறார் விஷால்.

விஷால்-திரிஷா இருவரும் முதல்முறையாக, 'சமர்' என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் செவ்வாய்க்கிழமை காலை நடந்தது.

அப்போது பேட்டியளித்த விஷாலிடம், 'இந்த படத்தில் நீங்களும், திரிஷாவும் காதல் மற்றும் பாடல் காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்து இருக்கிறீர்களே...' என்று கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த விஷால், "திரிஷாவும், நானும் நீண்டகால நண்பர்கள் என்பதால், ஒருவரையருவர் புரிந்துகொண்டு வேலை செய்தோம். படப்பிடிப்பின்போதே எங்கள் இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருப்பதாக நிறைய பேர் பாராட்டினார்கள். இரண்டு பேருக்கும் 'கெமிஸ்ட்ரி' நன்றாக இருக்கிறது.

திரிஷாவை எனக்கு ஜோடியாக்க நீண்டகாலமாக முயற்சி நடந்தது. 4 படங்களில் முடியாமல் போய்விட்டது. இந்த படத்தில் முடிந்து இருக்கிறது. மற்ற கதாநாயகிகள் நடித்தால் பொருத்தமாக இருந்திருக்காது என்று சொல்கிற அளவுக்கு, திரிஷா இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பதால், முதல்நாள் படப்பிடிப்பில் இரண்டு பேரையும் நடிக்க வைப்பதற்கு டைரக்டர் ரொம்ப சிரமப்பட்டார். இரண்டு பேரும் கண்களால் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் காட்சியில், இருவருமே சிரித்து விடுவோம். ஒருவழியாக சமாளித்துக்கொண்டு நடித்து முடித்தோம்," என்றார்.

 

Post a Comment