மும்பை: பாலிவுட் நடிகை மனீஷ் கொய்ராலா புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அமெரிக்கா கிளம்பினார்.
பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை நடத்தப்பட்டன. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டது. அவரது தாய் சுஷ்மா அவருக்கு துணையாக மருத்துவமனையில் இருந்தார்.
பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதையடுத்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெற அவர் நேற்று இரவு அமெரிக்கா கிளம்பினார். விமான நிலையத்திற்கு வந்த அவரை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் படம் பிடித்தனர்.
திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருந்த மனீஷாவுக்கு குடிப் பழக்கம் இருந்தது. அண்மையில் தான் அந்த பழக்கத்தை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment