ஜெயா டிவிக்காக வரும் டிசம்பர் 29-ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான்.
தாய் மண்ணே வணக்கம் என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது.
ஆஸ்கர் விருது பெற்ற பின் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயா தொலைக்காட்சிக்காக உள்ளூரில் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுவே. இதற்கு முன் தரமணியில் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் ரஹ்மான். அதன் பிறகு இப்போதுதான் தமிழகத்தில் நடத்துகிறார்.
இந்நிகழ்ச்சியில் உலகத் தரத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி மற்றும் ஒலி அமைப்போடு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ரோஜா முதல் கடல் வரை தமிழ் பாடல்கள் மட்டுமே இடம் பெறும் என்று ரஹ்மானே அறிவித்துள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகர்கள், 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் விழா இது.
Post a Comment