சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி சன் டிவியின் மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த் நடித்த படையப்பா ஒளிபரப்பாகிறது.
ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு எப்.எம் ரேடியோக்களில் ரஜினி நடித்த திரைப்படங்களில் இருந்து பாடல்கள் ஒளிபரப்புவார்கள். இசைத் தொலைக்காட்சிகளில் நாளைய தினம் பெரும்பாலும் ரஜினிகாந்த் நடித்த படங்களின் பாடல்கள்தான் வரிசைகட்டி நிற்கும். இந்த வரிசையில் இப்போது சன் டிவியும் சேர்ந்துள்ளது.
தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட விடுமுறை தினங்களில்தான் சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்புவது சன் டிவியின் பாலிசி. இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் 12-12-12 என சிறப்பு தினமாக வருவதால் இதை ரஜினி ரசிகர்களுடன் கொண்டாடுகிறது சன் டிவி. டிசம்பர் 12 புதன்கிழமை மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் நடித்த படையப்பா திரைப்படத்தை சிறப்பாக ஒளிபரப்பாகிறது சன் டிவி.
இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம். 91-96 கால கட்டத்தில் அதிமுக ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் ரஜினி இருந்த போது எடுக்கப்பட்ட திரைப்படம். இப்போது ரஜினியின் பிறந்தநாளை வள்ளுவர் கோட்டத்தில் கொண்டாட அவருடைய ரசிகர்களுக்கு இடம் மறுக்கப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு எதிரான மனநிலைக்கு மாறிவருகின்றனர் என்று கூறப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் சன் டிவியில் படையப்பா திரைப்படத்தை சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்புகின்றனர் என்று தொலைக்காட்சி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
Post a Comment