அசின் எந்த நேரத்தில் பாலிவுட் போனாரோ தெரியவில்லை. அங்கு சென்றதில் இருந்தே ஒரே போராட்டமாகத் தான் உள்ளது. கஜினி சூப்பர் ஹிட்டானாலும் அது ஆமிர் கானுக்காகவும், முருகதாஸின் கதைக்காகவும் ஓடியது. அதையடுத்து அவர் சல்மான் கானுடன் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் புஸ்ஸானது. தொடர்ந்து அவரும், சல்மானும் நடித்த ரெடி ஓடியது. ஆனால் அதற்கு சல்லு தான் காரணம்.
இதையடுத்து ஆசின் நடித்த ஹவுஸ்ஃபுல் 2, போல் பச்சன் ஆகிய படங்கள் வசூலை அள்ளினாலும் அதில் பெரிய பட்டாளமே நடித்ததால் படம் என்னால் தான் ஓடியது என்று அசினால் சொல்ல முடியாமல் போனது. இதையடுத்து சோலோ ஹீரோயினாக அவர் அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடித்த கிலாடி 786 ரிலீஸான வார இறுதியில் ரூ.34 கோடி வசூலை அள்ளியது.
அடடா படம் நல்லா போகுதே என்று நினைக்கையில் ஆமீர் கானின் தலாஷ் வெளியாகி கிலாடியை மூலையில் உட்கார வைத்துவிட்டு வசூலில் சாதனை படைத்து வருகிறது. தலாஷ் ரிலீஸான 10 நாட்களில் ரூ.74.47 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் கிலாடியில் எப்படியும் பெரிய பெயர் வாங்கிவிடலாம் என்று நினைத்த அசினின் நினைப்பில் மண் விழுந்துள்ளது.
இதற்கிடையே நான் பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின் என்று அவ்வப்போது மறக்காமல் குறிப்பிடும் அசினின் பேச்சைக் கேட்கத் தான் ஆளில்லை.
Post a Comment