மதுரையில் பாரதிராஜாவின் பட ஆடியோ ரிலீஸ் - ரஜினி, கமலுக்கு அழைப்பு!

|

சென்னை: மதுரையில் நடக்கும் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வருமாறு ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவிக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இந்த மூன்று நட்சத்திரங்களும் பாரதிராஜாவின் முதல்படமான 16 வயதினிலேயில் நடித்தவர்கள்.

bharathiraja invites kamal rajini
அந்தப் படத்தில் கமல் சப்பானி கேரக்டரிலும், ரஜினி பரட்டை வேடத்தில் வில்லனாகவும், ஸ்ரீதேவி மயிலு கேரக்டரிலும் நடித்தனர். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது பாரதிராஜா நீண்ட இடைவெளிக்கு பின் அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.

இதன் பாடல் வெளியீட்டு விழாவைத்தான் மதுரையில் நடத்த பாரதிராஜா ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக மூவரிடமும் பாரதிராஜா பேசி வருகிறார். அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தொடக்க விழா தேனி அல்லி நகரத்தில் அமர்க்களமாக நடந்தது நினைவிருக்கலாம்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

 

Post a Comment