ராம நாராயணன் இணைந்து சந்தானம் தயாரித்து நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு சென்சார் குழு யு சான்று அளித்துள்ளது.
இந்தப் படத்தில் டாக்டர் சீனிவாசன் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.
மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தில் விசாகா நாயகியாக நடித்துள்ளார்.
வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் இப்போது ஜனவரி 25-க்கு தள்ளிப் போய்விட்டது.
இந்த நிலையில் படத்தை இன்று தணிக்கைக் குழுவினர் பார்வையிட்டனர். எந்தக் கட்டும் இல்லாமல் யு சான்றளித்தனர்.
கண்ணா லட்டு தின்ன ஆசையாவுக்கு தமன் இசையமைத்துள்ளார். ராம நாராயணனின் ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது.
Post a Comment