சமையல் அறை ரொமான்ஸ் ரகசியங்கள்…. நீயா நானா முன்னோட்டம்

|

Neeya Naana Discuss About Kitchen Romance

சமையல் அறை என்பது வெறும் உப்பு, புளி, மிளகாய் என்பது மட்டுமல்ல அது உயிரோட்டமுள்ள இடம். வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ அன்னையோ, மனைவியோ, மகளோ அன்பாக சமைக்கிறார்கள். பாத்திரங்கள் அவர்களுக்கு நண்பர்கள். அஞ்சரைப் பெட்டியும் கூட அவர்களின் ஸ்பரிசத்தை புரிந்து அதற்கேற்ப பொருட்களை வழங்கும்.

இந்த சமையலறை பெண்களுக்கான இடம் மட்டுமல்ல ஆண்களுக்கும் அங்கு இடமுண்டு. இன்றைக்கு பெரும்பாலான ஆண்கள் சுவையாய், அழகாய் சமைக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனைவி வந்த பின்னர் எத்தனை ஆண்கள் பிரியமாய் சமைத்து பறிமாறுகிறார்கள் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். மனைவியோடு சேர்ந்து ரொமான்ஸ் உணர்வுகளுடன் சமைக்கும் ஆண்கள்தான் இந்தவாரம் நீயா நானா நிகழ்ச்சியில் பேச இருக்கின்றனர்.

எப்பவுமோ நீயா நானா முடிஞ்ச உடனேதான் அதைப்பற்றி எழுதுவது வழக்கம். ஆனால் இந்த வாரம் நிகழ்ச்சியின் முன்னோட்டமே சுவாரஸ்யமாக இருந்தது. அதான் நாமும் முன்னோட்டம் எழுதுவோமே என்று தொடங்கிவிட்டோம்.

சாம்பார்ல உப்பு போடுவதற்காக அதை எடுக்கும் போது அப்படியே என் கை மனைவியின் கண்ணத்தை தடவும் என்கிறார் ஒருவர். சமையல் அறையில் கன்னத்தோடு கன்னம் உரசி ரொமான்ஸ் செய்துகொண்டே சமைப்போம் என்கிறார் மற்றொருவர். அவர்கள் சொல்ல சொல்ல ஆஹா.... என்று சொல்லிவிட்டு சிரித்தார் கோபிநாத். ஒருவேளை அவர்வீட்டில் நடந் சமையலறை ரொமான்ஸ் நினைவிற்கு வந்துவிட்டதோ என்னவோ?

ஆண்கள் கூட வெட்கப்படுவார்களா என்ன இந்த நிகழ்ச்சியில் சிலர் விவரிக்கும் ரொமான்ஸ் நினைவுகளைக் கேட்டு பெரும்பாலான ஆண்கள் வெட்கப்பட்டு சிரிக்கின்றனர்.

சமையல் செய்யும் ஆண்களை சமையல் பற்றி தெரியாத ஆண்கள் கிண்டல் அடிப்பது வாடிக்கைதான். அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேச இருக்கின்றனர்.

இந்த வார ஞாயிறு இரவு ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மொத்தத்தில் களை கட்டப்போகிறது என்றே கூறலாம்.

 

Post a Comment