'வடிவேலுவுக்கும் மேல் தம்பி ராமையா...' - 'உ' பட இயக்குநர்!

|

Thambi Ramaiya Is Morethan Vadivelu Director Ashique

தம்பி ராமையா பிரதான வேடத்தில் நடிக்க, குறும்படங்களுக்காக பல விருதுகளைப் பெற்ற பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர் ஆஷிக் இயக்கத்தில் உருவாகும் படம் இது.

ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தம்பி ராமையா பிரதான வேடமேற்று நடிக்கிறார். அவருடன் பல புதுமுகங்கள் நடிப்பில் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது இந்தப் படம்.

படத்தின் இயக்குநர் ஆஷிக், விசுவல் கம்யூனிகேசன் மற்றும் சென்னை எம்.ஜி.ஆர் பிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்கம் பயின்றவர்.

தம்பி ராமையா தவிர, வருண், மதன் கோபால், 'ஸ்மைல்' செல்வா, சத்யசாய், ராஜ்கமல், சௌந்தரராஜா, காளி, ராஜசிவா, தீப்ஸ் சூப்பர் சிங்கர் ஜூனியர் டைட்டில் வின்னர் ஆஜீத், மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஆனால் இன்னும் நாயகி யார் என்பதை முடிவு செய்யவில்லையாம்.

படம் குறித்து இயக்குநர் ஆஷிக் பேசுகையில், "தலைப்புக்கு அர்த்தம் பிள்ளையார் சுழி என்பதுதான். இந்தப் படத்தின் ஹீரோ பெயர் கணேஷ். ஹீரோ வேறு யாருமல்ல, தம்பி ராமையாதான். அவர் ஒருவர்தான் இந்த வேடத்தைச் செய்ய முடியும். அதனால் அவரை ஒப்பந்தம் செய்தோம்.

தம்பி ராமையாவின் சிறப்பே, அவர் அழுதால் நாமும் அழுவோம், சிரித்தால் நாமும் சிரிப்போம். ஆனால் வடிவேலு போன்றவர்கள் சிரிப்புக்கு மட்டுமே உத்தரவாதம் தர முடியும். முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து இந்தப் படத்தை இயக்குகிறேன்," என்றார்.

படத்துக்கு இசை அபிஜித் ராமசாமி, ஒளிப்பதிவு ஜெயப்பிரகாஷ். பாடல்களை எழுதி தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கிறார் முருகன் மந்திரம்.

 

Post a Comment