இசையமைப்பாளருக்கு திருமண வரவேற்புக்கு பத்திரிக்கை வைத்து பிடுங்கிச் சென்ற ஜெயகாந்தன்

|

Music Director Disappoints His Frie

சென்னை: பிரபல நாவலாசிரியர் ஜெயகாந்தனின் மகள் திருமணம் நடந்தபோது மகாலின் பெயரைப் பார்த்ததும் அதற்கு இசையில் பெரும் ஞானமுள்ள இசையமைப்பாளர் வர மறுத்தார் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாடல் ஆசிரியர், கவிஞர் வைரமுத்து விகடன் மேடையில் கூறியிருப்பதாவது,

எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் நீங்கள் ரசிக்கும் விஷயம்?

அவரது அறச் சீற்றம்.

ஒரு நாள் காலையில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.

நான் ஜெயகாந்தன் பேசுகிறேன்.

வணக்கம்; வைரமுத்து பேசுகிறேன்.

என் மகள் திருமண வரவேற்புக்கு உங்கள் மண்டபம் தேவைப்படுகிறது.

அது உங்கள் மண்டபம்; எடுத்துக்கொள்ளுங்கள்.

'பொன்மணி மாளிகை' பெயரிட்டுத் திருமண அழைப்பிதழ் அச்சிட்டவர், ஓர் இசையமைப்பாளரைச் சந்தித்து அழைப்பிதழ் தந்தாராம்.

'கட்டாயம் வருகிறேன்' என்ற உறுதிமொழி தந்து அழைப்பிதழைப் பிரித்த இசையமைப்பாளர், திருமண மண்டபத்தின் பெயரைப் பார்த்ததும் திகைத்துப்போனாராம். 'நான் அங்கு வர முடியாதே' என்று நெளிந்தாராம்.

விசுக்கென்று எழுந்து வாசல் வரை சென்ற ஜெயகாந்தன் விறுவிறுவென்று திரும்பிவந்து, 'நீதான் திருமணத்திற்கு வரப்போவதில்லையே! உனக்கெதற்கு அழைப்பிதழ்?' என்று அழைப் பிதழைப் பறித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம்.

இந்தச் சம்பவத்தை ஒரு நண்பரின் வாய்மொழியாக அறிந்தேன்.

கண்ணதாசன் வரியைப் பொருத்தி ஜெயகாந்தனை நினைத்துக்கொண்டேன்.

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?

என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்த இசையமைப்பாளர் யார் என்பதை நீங்கள் 11வது பாராவிலேயே கண்டுபிடித்திருப்பீர்களே..

 

Post a Comment