சென்னை: பாடகர் க்ரிஷை மணந்த நடிகை சங்கீதாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
உயிர், பிதாமகன் போன்ற படங்களால் பிரபலமானவர் நடிகை சங்கீதா. அவர் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி பாடகர் க்ரிஷை மணந்தார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த சங்கீதா கர்ப்பமானார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்த தகவல் அறிந்த நடிகர்கள் ஜீவா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் சங்கீதா, க்ரிஷுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை குஷ்பு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவீட்: பாடகர் க்ரிஷ் மற்றும் சனுவுக்கு குட்டி தேவதையின் வரவுக்காக வாழ்த்துக்கள். குழந்தைக்கும், தாய்க்கும் எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment