மகளை களமிறக்கும் நடிகை ரூபினி… தமிழ்படத்தில் அறிமுகம்

|

Actress Rubini S Daughter Debut Film

மும்பையைச் சேர்ந்த முன்னாள் கதாநாயகி ரூபினியின் மகள் நடிக்க வருகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோமல் என்ற இயற்பெயர் கொண்ட ரூபினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனிதன் படம் மூலம் நடிக்க வந்தார். கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த அவர், முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் புதுமுகங்களின் பெருக்கத்தால் ஓய்வு பெற்றுப் போய் விட்டார்.

இப்போது அவரது மகள் நடிக்கும் வயதை எட்டி விட்டாராம். அம்மாவை விட படு அழகாக இருக்கிறாராம் ரூபினியின் மகள். இதனால் தனது தாயார் பாணியில் அவரும் நடிக்க வருகிறாராம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே ராதா தனது இரு மகள்களையும் நடிக்க வைத்து விட்டார். கமல், அர்ஜூன், சரத்குமார் ஆகியோர் தங்கள் மகள்களை நடிக்க வைத்துள்ளனர். இப்போது ரூபினி தனது மகளை களம் இறக்குகிறார். வாரிசு நடிகைகள் வரிசையில் இன்னொரு புதுமுகம். ஹீரோக்களுக்கு யோகம்தான்.

 

Post a Comment