தலைவாவாவாவாவா... ஹேப்பி பெர்த்டே.... இது ரஜினிகாந்த் பிறந்த நாளுக்காக ராகவா லாரன்ஸ் பாடிய பாடல். ரஜினியின் ஸ்டைல், ஸ்பீட், தூள் என அவரை புகழ்ந்து பாடியும், நடனமாடியும் இருக்கிறார் லாரன்ஸ். இன்று இரவு சன் டிவியின் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த பாடல் ஒளிபரப்பாகிறது.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பெரும்பாலான தொலைக்காட்சிகளில் ரஜினி பாடல்களும், அவர் நடித்த படங்களில் இருந்து பஞ்ச் வசனங்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.
சன் தொலைக்காட்சியில் காலை சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் லதா ரஜினிகாந்த் சிறப்பு பேட்டி ஒளிபரப்பானது. தனது கணவரின் பிறந்தநாள் தினத்தை உலகமே கொண்டாடுகிறது என்றும் அதற்குக் காரணமான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதேபோல் ஏற்கனவே விருந்தினர் பக்கத்தில் பங்கேற்ற நடிகர் சூர்யா, இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கூறிய கருத்துக்களை ஒளிபரப்பினார்கள்.
இதைத் தொடர்ந்து 9 மணிக்கு இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணாவின் சிறப்பு பேட்டி ஒளிபரப்பானது. அண்ணாமலை தொடங்கி பாட்ஷா வரை ரஜினி உடனான நெருக்கம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் இடையே நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Post a Comment