மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் வேனிட்டி வேனை சல்மான் கான் தனது சைக்கிளில் சுற்றி சுற்றி வந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் பிரபலமான காதல் ஜோடியாக இருந்தவர்கள். அதன் பிறகு ஆளுக்கொரு பக்கமாக சென்றுவிட்டனர். சல்மான் இன்னும் கட்டை பிரம்மச்சாரியாக இருக்கிறார். ஐஸ்வர்யா அமிதாப் மருமகளாகிவிட்டார். காதல் முறிவுக்குப் பிறகு ஐஸ் சல்மானை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள மஹபூப் ஸ்டுடியோஸில் தபாங் 2 ஷூட்டிங்கில் இருந்தார் சல்மான். விளம்பர பட ஷூட்டிங்கிற்காக ஐஸ்வர்யாவும் அதே ஸ்டுடியோவுக்கு வந்தார். அப்போது ஐஸின் வேனிட்டி வேனை சல்மான் கான் சைக்கிளில் சுற்றி சுற்றி வந்துள்ளார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சல்லு சைக்கிள் ஓட்டுகிறார் என்பது பாலிவுட் அறிந்த செய்தி.
இருவரும் ஒரே இடத்தில் இருந்தபோதும் ஐஸும், சல்லுவும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment