இந்த துளசி நமக்கு போட்டியாக வந்துட்டாளே: கார்த்திகா

|

Karthika Considers Sister As Competitor

சென்னை: நடிகை கார்த்திகா தனது தங்கை துளசியை போட்டியாக நினைக்கிறாராம்.

நடிகை கார்த்திகா முதலில் தெலுங்கு, மலையாளம் என்று சுற்றிவி்ட்டு அதன் பிறகே கோலிவுட் வந்து சேர்ந்தார். பிற மொழிப் படங்களில் சோபிக்க முடியாமல் இருந்த நேரத்தில் தான் கார்த்திகாவுக்கு கோ படம் கிடைத்தது. படம் ஹிட்டாகவே கார்த்திகாவும் தமிழகத்தில் பிரபலமானார். இதையடுத்து அவர் நடித்த தெலுங்கு படமான தம்முவும் ஹிட்டடிக்க கார்த்திகா குஷியாகிவிட்டார்.

தற்போது அவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கார்த்திகாவின் தங்கை துளசி மணிரத்னத்தின் கடல் படத்தில் நடித்துள்ளார். ரிலீஸுக்கு முன்பே இப்படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இன்னும் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில் துளசிக்கு யான் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

பார்ப்பதற்கு துளிசியும் கார்த்திகா போன்று தான் உள்ளார். இந்நிலையில் கார்த்திகா தனது தங்கையை போட்டியாக நினைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

Post a Comment