சென்னை: விஷ்ணுவர்தன் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அஜீத் குமார் காயம் அடைந்த வீடியோ நேற்று வெளியானது. அதை பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் அஜீத் நடித்து வருகிறார். அதில் ஒரு சண்டைக் காட்சியில் காரின் முன்பகுதியில் நின்று சென்ற அஜீத்துக்கு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது காலில் பலத்த அடிபட்டது. மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர் படம் முடிந்த பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டார். இந்த விபத்து குறித்த வீடியோ நேற்று இணையதளங்களில் வெளியானது. அதைப் பார்த்த பலரும் அஜீத் ஏன் இவ்வளவு ரிஸ்க் எட க்கிறார், டூப் போட்டுக்கலாமே என்றனர்.
ஆனால் அஜீத்தோ டூப் இன்றி தானே நடித்தால் தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார். இதற்கு முன்பும் அவர் மங்காத்தா, பில்லா 1 மற்றும் 2, பரமசிவன் உள்ளிட்ட படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். எல்லாம் இருக்கட்டும் 'தல்' முதலில் உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள், அப்பொழுது தானே எங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
அஜீத் என்னமோ தைரியமாக ரிஸ்க் எடுத்து காயமடைகிறார். ஆனால் அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் தான் அதிகம் வருத்தப்படுகின்றனர். இந்நிலையில் அதே படத்திற்காக இரண்டு நாட்கள் தலை கீழாகத் தொங்கி நடித்துக் கொடுத்துள்ளார். நல்ல வேளை அப்போது எந்த விபத்தும் ஏற்படவில்லை.
தல முதலில் உடம்பை பார்த்துக்கோங்க!
Post a Comment