சென்னை: அஜீத் குமார் நடித்து வரும் விஷ்ணுவர்த்தன் படத்தின் சண்டைக் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.
அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். அதில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் அஜீத் குமாரின் காலில் பலமாக அடிபட்டது. இதையடுத்து அவருக்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஆனால் அவரோ தான் ஒப்பந்தமாகியுள்ள படங்களை முடித்த பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் அப்படத்திற்கான சண்டை காட்சிகள் சென்னையில் நேற்றும், இன்றும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு தல என்று பெயர் வைக்கலாமா என்று கேட்டதற்கு அஜீத் குமார் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Post a Comment