கர்ப்பிணிகள் தயக்கமின்றி எய்ட்ஸ் டெஸ்ட் எடுத்துக்கணும் - ஐஸ்வர்யா ராய்

|

Aishwarya Appeals Pregnant Women Un   

வதோத்ரா: கர்ப்பிணிகள் தயக்கமின்றி எச்ஐவி டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

ஐ.நா. எய்ட்ஸ் சர்வதேச நல்லெண்ண தூதராக பதவி வகிக்கும் அவர் குஜராத் வதோத்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "இனி நடிப்பைத் தாண்டி பல பணிகளிலும் ஈடுபடப் போகிறேன்.

எச்.ஐ.வி. வைரஸ் மற்றும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்துவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்யப் போகிறேன். கர்ப்பிணிகள் தயக்கத்தை விட்டு விட்டு எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களது குழந்தைகள் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்," என்றார்.

தனது சினிமா எதிர்காலம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஐஸ்வர்யா, "இன்னும் அதுகுறித்து முடிவு செய்யவில்லை. இப்போதைக்கு ஒரு வயதான என் மகள் ஆராத்யாவை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்," என்றார்.

அப்படீன்னா.. அடுத்த வருஷம் ஐஸ்வர்யா அரிதாரத்துக்கு ரெடின்னு அர்த்தம்!

 

Post a Comment